உலக கோடீஸ்வரர் வெளியிட்ட மகளின் வீடியோ

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்துள்ள நிலையில், தனது மகள் கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார் இளவரசர் அல்வாலித்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையான சவுதி அரேபிய இளவரசருமான அல்வாலித் பின் தலால், தனது மகள் ரீம் நள்ளிரவில் கார் ஓட்டிய வீடியோவை வெளியிட்டார்.

அல்வாலித் பின் தலால் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்தார். பின் இருக்கையில் இளவரசரின் பேத்திகளும் பயணித்தனர்.

அந்த வீடியோ பதிவில் பேசிய அல்வாலித் பின் தலால், சவுதி அரேபிய நாடு 21ஆம் நூற்றாண்டில் நுழைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ள பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தனது நன்றியையும் வாழ்த்துகளையும் இளவரசர் அல்வாலித் பின் தலால் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...