தடை நீங்கியது: சாலையில் குவிந்த நூற்றுக்கணக்கான இளம்பெண்கள்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் பெண்கள் தனியாக வாகனம் ஓட்டும் தடையை முதன் முறையாக நீக்கியுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் சாலையில் வாகனங்களுடன் குவிந்துள்ளனர்.

மத அடிப்படைவாத சவுதி அரேபிய அரசு பட்டத்து இளவரசர் சல்மானின் கீழ் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக சவுதி அரேபியாவில் முதன் முறையாக திரையரங்கம் திறக்கப்பட்டு சர்வதேச திரைப்படங்களை சவுதி மக்களும் கண்டு களிக்கும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த வகையில் சவுதி பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனியாக வாகனம் ஓட்டும் உரிமையையும் சல்மான் இளவரசர் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கியுள்ளார்.

இந்த ஆணையானது ஜூன் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்ற உத்தரவின் பேரில், தற்போது சவுதி அரேபியாவில் பெண்கள் தனியாக வாகனம் ஓட்டும் தடை முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நள்ளிரவில் திரளான பெண்கள் தங்கள் வாகனங்களுடன் சாலையில் குவிந்து வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

பட்டத்து இளவரசர் சல்மானின் அடுத்த திட்டமாக எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பெரும்பாலான பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது என கூறப்படுகிறது.

தற்போதைய ஆய்வின்படி சுமார் 22 விழுக்காடு சவுதி பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கின்றனர்.

சவுதி அரேபியாவை பொறுத்தமட்டில், சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில், பொதுவெளியில் இசையை ரசிப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டது.

மட்டுமின்றி திருமணமாகாத இளம்பெண்களூடன் இளைஞர்கள் பொதுவெளியில் ஒன்றாக அமர்ந்திருப்பதும் குற்றமாக கருதப்பட்டது.

ஆனால் பட்டத்து இளவரசர் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர் அதிரடியன மாறுதல்களை சவுதியில் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறார்.

சல்மானின் இந்த அதிரடி முடிவுகளுக்கு பின்னால் சர்வதேச வியாபார நோக்கம் இருப்பினும், தற்போதைய சூழலில் அங்குள்ள இளஞர்கள் மற்றும் இளம்பெண்களால் புரட்சி என்றே பார்க்கப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...