மரண தண்டனையில் இருந்து 93 பேரை காப்பாற்றிய நபர்: பொதுநலச் சேவை என நெகிழ்ச்சி

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு மரண தண்டனை பெற்ற 93 நபர்களை இந்தியர் ஒருவர் காப்பாற்ரியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஐக்கிய அமீரக நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

அங்கு போதிய அளவு ஊதியம் கிடைக்காமல், வேலை பறிபோகும் நிலையில் இந்தியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இதில் பலர் கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு மரண தண்டனைக்கு விதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் துபாயில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வரும் பஞ்சாபியரான ஓபராய் என்பவர், இதுபோல் குற்றங்களை செய்து மரணத்தின் வாசலில் காத்திருக்கும் இந்தியர்களை காப்பாற்றுவதை சேவையாக செய்து வருகிறார்.

குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பெரிய தொகையை இழப்பீடாக கொடுக்கும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கும் சட்டம் ஐக்கிய அமீரகத்தில் அமுலில் உள்ளது.

இச்சட்டத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பெரிய தொகையை நஷ்டஈடாக வழங்கி ஓபராய் இதுவரை 93 இந்தியர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்.

இவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுபோன்ற தண்டனைகளில் இருந்து இந்தியர்களை காப்பாற்ற இதுவரை ரூ.20 கோடி வரை நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...