மீண்டும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்: 45 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்

Report Print Balamanuvelan in மத்திய கிழக்கு நாடுகள்

காஸா பகுதியிலிருந்து எரியும் பலூன்கள் இஸ்ரேலுக்குள் அனுப்பப்பட்டதையடுத்து இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுக்கும் விதமாக வானத்தை நோக்கி சுட்டது.

இதையடுத்து சுமார் 45 ராக்கெட்டுகள் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள் வீசப்பட்டன.

இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு கருவி அவற்றில் ஏழு ராக்கெட்களை தாக்கியதில் மூன்று காஸாவிலேயே விழுந்தன.

தங்கள் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் 25 ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

வீசப்பட்ட ராக்கெட்களில் ஆறு எல்லைப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்ததாகவும் மூன்று காஸா பகுதியிலேயே விழுந்ததாகவும் Eshkol Regional Council கூறியது.

இன்னொரு ராக்கெட் ஒரு நர்ஸரி பள்ளியின் அருகில் விழுந்தது.

இஸ்ரேல் பக்கத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. காஸாவில் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers