மாரடைப்பால் துடித்த விமான பயணி: மது போதை என கூறி ஊழியர்கள் அலட்சியம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் விமான பயணி ஒருவர் மாரடைப்பால் துடித்ததை மது போதையில் நடிப்பதாக கூறி விமான பணிப்பெண்கள் அலட்சியப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபுதாபியில் இருந்து புறப்பட்ட ஆசிய விமான சேவை நிறுவன விமானம் ஒன்றில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் குளிரூட்டும் அமைப்பானது வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனிடையே பயணி ஒருவர் விமான பணிப்பெண்களை அழைத்து விமானம் தாமதமானதன் காரணத்தை வினவியுள்ளார்.

மட்டுமின்றி விமானத்தின் உள்ளே வெப்பம் அதிகமாக உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் தம்மை விமானத்தில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். ஆனால், பிரச்னை தீர்க்கப்படும்வரை விமானத்தில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நபர் நெஞ்சு வலியால் துடிக்க துவங்கியுள்ளார்.

மட்டுமின்றி சுயநினைவையும் இழக்க, பாதுகாப்பு அதிகாரிகளுடன் துணையுடன் விமானத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.

திடீரென்று தமது உடல் நிலையில் ஏற்பட்ட மாறுதல் என்னவென்று புரியவில்லை எனவும்,

இதனால் விமான பணிப்பெண்கள் தாம் மது அருந்திவிட்டு நாடகமாடுவதாகவும் கூறியதாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விமான பணிப்பெண்கள் அளித்த புகாரின்பேரில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

ஆனால் அவரது உடல் நிலை மேலும் மோசமடையவே உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers