சவுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: தாக்குதல்தாரி குறித்து முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில், 2016-ல் நடந்த தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியது இந்தியரே என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

2016-ஆம் ஆண்டு யூலை 4-ல் அடுத்தடுத்து மூன்று முறை, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். முதல் தாக்குதல் ஜெட்டா நகரில் உள்ள அமெரிக்க துாதரகம் மீது, தற்கொலைப்படை பயங்கரவாதியால் நிகழ்த்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காடிப் நகரில் உள்ள ஷியா பிரிவினர் மசூதியிலும், மெதீனா நகரில், மஸ்ஜித் - இ - நப்வி என்ற மசூதியிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

இவற்றில் ஜெட்டா நகரில் நிகழ்ந்த தாக்குதலில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயஸ் காக்ஸி என்பவன் ஈடுபட்டதாக சவுதி அரேபியா புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் பயஸின் மரபணு மாதிரியை சோதித்த சவுதி அதிகாரிகள் அவர் இந்தியாவை சேர்ந்தவர் என அறிவித்துள்ளனர்.

இத்தகவலை டில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவரான பயஸ் கடந்த 2010ல் புனே மாவட்டத்தில், ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவத்திலும் மூளையாக செயல்பட்டவர் ஆவார்.

இவர், 2006ல் வங்கதேசம் வழியாக பாகிஸ்தான் தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து 2009ல், சவுதிக்கு சென்று லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பில், இந்தியர்களை சேர்க்கும் வேலையை மேற்பார்வை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers