சவுதியை குறிவைத்து மீண்டும் ஏவுகணை தாக்குதல்: பதிலடி தந்த ராணுவம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
207Shares

ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடும் சவுதி கூட்டுப்படைகள் ஹெளதி போராளிகளின் ஏவுகணையை தடுத்து நிறுத்தி எதிர் தாக்குதல் தொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் அன்று நடந்த இச்சம்பவம் தொடர்பில் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர். குறித்த ஏவுகணையானது சவுதியின் பிரபல எண்ணெய் நிறுவனத்தின் கிட்டங்கியை குறிவைத்து ஏவப்பட்டுள்ளதாகவும், எதிர் தாக்குதலில் ஏவுகணையின் உதிரி பாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி சுமார் 9.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. குறித்த தாக்குதலில் உயிர் அபாயம் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் கிட்டங்கு பாதுகாப்பாக உள்ளது எனவும், தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

சவுதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஹெளதி போராளிகள் இதுவரை 107 ஏவுகணைகளையும் 66,000 குட்டிரக ராக்கெட்டுகளையும் சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஹெளதி போராளிகளுக்கு ஆயுதங்களை ஈரான் அரசே வழங்கி வருவதாக சவுதி குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் ஹெளதி போராளிகள் இதை மறுத்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்