சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் 18ஆம் திகதி முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி, கடந்த 1980ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சவுதியில் திரையரங்குகள் எங்கும் செயல்படவில்லை.
தற்போது, சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு மைதானங்களில் பெண்கள் கண்டுகளிக்க அனுமதி என பல விடயங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சவுதியில் சினிமாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 18ஆம் திகதி முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என கூறப்படுகிறது.
இதற்கு அடுத்த கட்டமாக ஐந்து ஆண்டுகளில், சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 திரையரங்குகள் வரை திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்