மது போத்தல்களுடன் போஸ் கொடுத்த இளம் பெண்: கைது செய்த பொலிஸ்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
80Shares
80Shares
ibctamil.com

சவுதி அரேபியாவில் இளம் பெண் ஒருவர் மது போத்தல்களுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதால் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் குடியிருக்கும் இளம் பெண் ஒருவர் மது போத்தல்களுடனும், பாலியல் உறவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுடனும் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் சவுதி இணையவாசிகளிடையே வைரலான நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த இளம் பெண்ணின் செயல் கண்டிக்கத்தக்கது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் புனைப்பெயரில் பேஸ்புக் கணக்கை துவங்கி இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமோ விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பல இணையவாசிகள் குறித்த இளம் பெண் தொடர்பில் புகார் தெரிவித்த பின்னரே அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண்ணின் நடத்தை குறித்து பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் தகவல் தெரியாது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்