சவுதி மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்: வெற்றிகரமாக நடுவானில் அழிப்பு

Report Print Harishan in மத்திய கிழக்கு நாடுகள்

ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்ததாக சவுதி அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஏமன் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து சவுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(16/1/2017) சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள ஜிஸான் மாகாணத்தின் மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஈரானின் உதவியுடன் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் வான்படை மூலம் தாக்குதலை முறியடித்துள்ளதாக சவுதி கூறியுள்ளது.

தொடர்ந்து சவுதியின் ரியாத் நகரை குறிவைத்து ஏமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கடந்த சில மாதங்களில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இது என்றும் சவுதி தெரிவித்துள்ளது.

ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது.

மேலும், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருவதாக சவுதி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்