சவுதியில் திருமணமான 10 மணிநேரத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை: நடந்தது என்ன?

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியில் தீவிபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மெக்காவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இருபதுகளில் உள்ள ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நேற்று மெடினா நகரில் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் புதுமண தம்பதி மெக்காவில் உள்ள தங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு வந்தனர்.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு தீயை அணைத்தனர்.

ஆனால் தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி திருமணமான 10 மணி நேரத்தில் அங்கு தங்கியிருந்த புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் மனைவிக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவத்தில் வேறு யாரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல் வரவில்லை. இதையடுத்து தீப்பற்றியது எப்படி என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்