சவுதி நடத்திய தாக்குதல்: குழந்தைகள் உட்பட 25 பேர் பலி

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

ஏமன் நாட்டு மேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறைந்துள்ள பகுதியின் மீது சவுதி அரேபிய கூட்டுப்படையினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அதே பகுதியில் வசித்து வந்த குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 15-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த தாக்குதல் பற்றி சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை,

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்