சவுதியில் பணிபுரிந்த நபர் தூக்கில் தொங்கிய அவலம்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்
78Shares

இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் சவுதி அரேபியாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொலிபகா கிராமத்தை சேர்ந்தவர் குடீடி பவனா, இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாகாணத்தில் இருக்கும் வீட்டில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பவனா வேலை செய்யும் வீட்டின் ஆட்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியில் சென்றுள்ளனர்.

வீட்டில் பவனா மட்டும் தனியாக இருந்த நிலையில் தண்ணீர் குழாய் பைப்பில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்த நிலையில் பவனா தூக்கில் சடலமாக தொங்குவதை உரிமையாளர் குடும்பம் பார்த்துள்ளது.

சவுதியில் பணி செய்வதற்கு முன்னர் துபாயில் பவனா வேலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையில் பவனா சடலத்தை தாய் நாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு அவரின் குடும்பத்தார் தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்