டாவின்சியின் இயேசு கிறிஸ்து ஓவியத்தை வாங்கிய மர்ம நபர் சவுதி இளவரசரா?

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
163Shares

இத்தாலியின் பிரபல ஓவியரான லியானார்டோ டாவின்சி வரைந்த இயேசு கிறிஸ்து ஓவியத்தை கடந்த மாதம் £330மில்லியன் தொகைக்கு வாங்கியது சவுதி பட்டத்து இளவரசர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உலகத்தின் ரட்சகர் என்று அழைக்கப்படும் இந்த ஓவியம் டாவின்சி வரைந்த ஓவியங்களில் மிக அரிதான ஒன்றாகும். இந்த ஓவியத்தை கடந்த மாதம் கிறிஸ்டி ஏலம் நிறுவனம் £330மில்லியன் தொகைக்கு ஏலத்து விற்று சாதனை படைத்தது.

ஆனால் குறித்த ஓவியத்தை ஏலம் எடுத்தவரின் பெயரை அந்நிறுவனம் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தது.

இந்த நிலையில் இந்த ஓவியத்தை வாங்கியது சவுதியின் பட்டத்து இளவரசர் முகமத் பின் சல்மான் என்று பிரபல அமெரிக்க நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசர் சல்மான் தமது நமிக்கைக்கு உரிய நபர் ஒருவர் மூலம் இந்த டாவின்சி ஓவியத்தை பெருந்தொகைக்கு ஏலம் எடுத்துள்ளார். முன்னதாக சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபர்ஹான் அல்-சவுத் என்பவரே ஓவியத்தை வாங்கிருக்கலாம் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டது.

ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் சவுதி இளவரசர்கள் கொத்தா கைதாகி வரும் நிலையில் திடீரென்று சவுதி இளவரசர்களில் ஒருவர் £330மில்லியன் தொகைக்கு ஓவியம் ஒன்றை ஏலத்தில் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாப்லோ பிக்காசோவின் ஓவியம்தான் ரூ.1169 கோடிக்கு விற்பனையானதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது டாவின்சி ஓவியம் முறியடைத்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்