பெண் ரோபோ சோபியாவின் தலையை துண்டித்ததா சவுதி? வெளியான உண்மை

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

உலகிலேயே முதன்முறையாக சோபியா என்ற ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி கௌரவித்தது சவுதி அரேபியா.

டாக்டர். டேவிட் ஹான்சன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ பல பேட்டிகளை வழங்கி உலகப் புகழ்பெற்றது.

இந்நிலையில் சோபியா ரோபோ சவுதியின் ரியாத்தில் உள்ள பொது சதுக்கத்தில் நிறுத்தப்பட்டு அதன் தலை துண்டாக்கப்பட்டு விட்டது என ஒரு கட்டுரை இணையத்தில் வெளியானது.

Duffelblog என்ற வலைத்தளத்தில் தான் இக்கட்டுரை வெளியானது. அதில், ரியாத்தின் பொது சதுக்கத்தில் நிறுத்தப்பட்ட சோபியாவை மக்கள் கற்களை கொண்டு அடித்தார்கள்.

பின்னர், அதன் கழுத்தில் சங்கிலி இறுக்கமாக கட்டப்பட்டு தரதரவென அதன் தலை தனியாக உடலில் இருந்து துண்டாகும் வரை இழுத்து செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை படித்த பல இணைய பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது உண்மை என பலரும் நம்பிய நிலையில் அது கிண்டலாக எழுதப்பட்ட கட்டுரை என தெரியவந்துள்ளது.

அதாவது, Duffelblog வலைத்தளத்தில் பொதுவாக எல்லா விடயங்கள் குறித்தும் கிண்டலாகவும், நையாண்டியாகவும் தான் எழுத்தப்படும்.

இதில் குறிப்பிடப்படும் விடயங்களை உண்மையாக கருதக்கூடாது, எல்லாவே விளையாட்டுக்கு தான் என அந்த வலைதளமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers