சவுதியில் தொடரும் நெருக்கடி: நாட்டைவிட்டு வெளியேறிய இளவரசரால் பரபரப்பு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
951Shares

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கைதானதும், யேமன் எல்லையில் இளவரசர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது சவுதி இளவரசர் ஒருவர் நாட்டை விட்டே வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யேமன் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் சவுதி இளவரசர் ஒருவர் கொல்லப்பட்டு சில மணி நேரங்களே கடந்த நிலையில் இன்னொரு இளவரசர் நாட்டை விட்டே வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியேறிய இளவரசர், சவுதியின் பரம எதிரியான ஈரான் நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் சவுதியின் மிகப்பெரிய பில்லியனர் உள்ளிட்ட 11 இளவரசர்களையும் 4 அமைச்சர்களையும் கைது செய்துள்ள நிலையில்,

சவுதியில் இருந்து அரச குடும்பத்தினர் எவரும் அரசின் உரிய அனுமதி இன்றி விமான பயணத்திற்கு அனுமதிக்க கூடாது என சவுதி விமானத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில்,

இளவரசர் துருக்கிகி பின் முகம்மது நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அரச குடும்பத்தினரிடையே கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

மட்டுமின்றி கடந்த சில தினங்களில் சவுதி அரச குடும்பத்தில் உள்ள 2 இளவரசர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், இளவரசர் துருக்கி பின் முகம்மது ஈரானில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்