கோடீஸ்வரர் உள்பட 11 சவுதி இளவரசர்கள் கைது: பட்டத்து இளவரசரின் அதிரடி நடவடிக்கை

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

உலக அரங்கில் சவுதி அரேபியாவின் மீது உள்ள பழமைவாத கருத்துக்களை மாற்றும் வகையில் சில முக்கிய நடவடிக்கைகளை பட்டத்து இளவரசர் எடுத்துள்ளார்.

ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 11 அரச இளவரசர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் அந்நாட்டு பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சவுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலையீட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அரச குடும்பத்தினரே ஊழலில் ஈடுபட்டாலும் கடும் தண்டனை இருக்கிறது என அவர் அறிவித்தார்.

இந்நிலையில், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் அறிவித்தார்.

இதை அடுத்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டதாக சவுதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோடீஸ்வரரான அல்வாலித் கைது செய்யப்பட்டது அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் பொருளாதார உலகிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட மற்ற இளவரசர்களில் பலர் முக்கிய துறைகளை வகிக்கும் மந்திரிகளாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்து விலகி கடந்த காலத்தில் போல் நடுநிலையான கொள்கைகளை பின்பற்ற போவதாக இளவரசர் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers