87 அப்பாவிகளின் உயிரை பறித்த ராணுவ வீரர் இவர் தான்

Report Print Peterson Peterson in மத்திய கிழக்கு நாடுகள்

சிரியாவில் உள்ள அப்பாவி குடிமக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் ரசாயன தாக்குதல் நிகழ்த்தியதில் 87 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்கு தங்களுடைய ராணுவம் காரணம் இல்லை என ரஷ்யா மற்றும் அமெரிக்கா மறுப்பு தெரிவித்தன.

அதே சமயம், இந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் நிகழ்த்தவில்லை என சிரியா அரசும் மறுத்துள்ளது.

இந்நிலையில், சிரியா மீது ரசாயன தாக்குதலை நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என்பது தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அலெப்போ நகர் எம்.பியான Fares Shehabi என்பவர் சமூக வலைத்தளத்தில் சில பரபரப்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் ரசாயன தாக்குதலை நடத்தியவரான Mohammed Hasouri என்பவர் தன்னுடைய உயர் அதிகாரியுடன் சேர்ந்து கை குலுக்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக விமானத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமில்லாமல், கடந்த மார்ச் மாதம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தவில்லை என சிரியா கூறி வரும் நிலையில் தற்போது ஆதாரப்பூர்வமாக அவரது ராணுவ வீரரின் புகைப்படம் வெளியாகியுள்ளது சிரியா அதிபரான ஆசத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments