லாட்டரியில் கோடிகளை அள்ளிய பெண்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர், ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் லாட்டரி சீட்டு பரிசுத் திட்டத்தில் 10 மில்லியன் திர்ஹாம் கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், குழந்தைகள் நல மருத்துவர் நிஷிதா ராதாகிருஷ்ண பிள்ளை.

இவர் அபுதாபியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய போது லாட்டரிச் சீட்டுகள் வாங்குவது வழக்கம்.

அபுதாபியில் லாட்டரிச் சீட்டு விற்பனை இன்னும் அமலில் உள்ளது. அங்கு லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மருத்துவர் நிஷிதா அபுதாபியில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

இருப்பினும் நிஷிதா லாட்டரி வாங்குவதை நிறுத்தவில்லை. நிஷிதாவின் கணவரும் ஆன்லைனில் லாட்டரி வாங்குவதில் ஆர்வம் கொண்டவராம்.

இந்நிலையில், நிஷிதா ஆன்லைனில் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. மேலும், முதல் பரிசாக 10 மில்லியன் திர்ஹாம் (இலங்கை மதிப்பில் ரூ.41,37,05,801) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் துபாய் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. நிஷிதா இதுவரை 50 சீட்டுகளுக்கு மேல் வாங்கி ஏமாற்றம் அடைந்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments