ஐ.எஸ் தீவிரவாதிகள் இப்படியும் செய்வார்களா? வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Peterson Peterson in மத்திய கிழக்கு நாடுகள்

ஈராக் நாட்டில் வசித்து வரும் 7 வயது சிறுவனின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் தற்போது அரசாங்கத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 18-ம் திகதி அன்று சந்தேகத்திற்குரிய 7 வயது சிறுவனை ராணுவ வீரர்கள் பிடித்துள்ளனர்.

கால்பந்து வீரர்கள் அணியும் உடையில் இருந்த சிறுவனிடம் தவறு இருப்பதை உணர்ந்த ஓர் ராணுவ வீரர் அவனது உடைகளை நீக்கியுள்ளார்.

அப்போது, சிறுவனின் உடலை சுற்றி வெடிகுண்டு ஒன்று கட்டப்பட்டிருந்ததை கண்டு ராணுவ வீரர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், சிறுவனுக்கு தைரியம் கொடுத்த வீரர் அவனது உடைகளை முழுவதுமாக நீக்கிவிட்டு வெடிகுண்டை செயலிழக்க முயன்றுள்ளார்.

வெடிகுண்டில் இணைக்கப்பட்டிருந்த கம்பிகளை துண்டித்துவிட்டு அவற்றை முழுமையாக நீக்கி சிறுவனை காப்பாற்றியுள்ளார்.

சிறுவனிடம் விசாரணை செய்தபோது ஐ.எஸ் தீவிரவாதிகள் அவனை கடத்தி தாக்குதல் நடத்த தயார்ப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

சிறுவனை மீட்ட ராணுவ வீரர்கள் அவனது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர்.

சர்வதேச அளவில் கொடூரமான தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது குழந்தைகளை கூட தற்கொலைப்படை தீவிரவாதிகளாக மாற்ற பயிற்சி அளித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments