459 டன், 1500 நபர்கள், தங்கத்தாலான படிக்கட்டு- சவுதி அரசரின் பலே பயணம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

அரசு முறை பயணமாக இந்தோனேசியா செல்லும் சவுதி அரசர் தன்னுடன் 459 டன் பயண சாமான்களையும் 1500 பேர் கொண்ட அமைச்சர் குழுவினரையும் தங்கத்தாலான நகரும் படிக்கட்டையும் கொண்டு சென்றுள்ளார்.

இந்தோனேசியாவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் சவுதி அரசர் ஒருவர் அரசு முறை பயணமாக செல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தோனேசியாவில் 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் 6 நாட்கள் அங்குள்ள பாலி தீவில் ஓய்வு எடுக்கிறார்.

சவுதி அரசருடன் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், இளவரசர்கள் உள்ளிட்ட 1500 பேர் உடன் செல்கின்றனர். மட்டுமின்றி பயண சாமான்களாக மட்டும் 459 டன் பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

சவுதி அரசர் பயன்பாட்டுக்கென 2 சொகுசு ரக கார்களையும் கொண்டு சென்றுள்ளார்.

சவுதி அரசரின் இந்த 3 நாள் அரசு முறை பயணத்தில் 25 பில்லியன் டொலர் அளவுக்கு முதலீட்டை இந்தோனேசிய அரசு எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

சவுதி அரசர் தங்கியுள்ள ஹொட்டலுக்கு 10,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மட்டுமின்றி உணவு தயாரிக்கும் பொருட்டு 150 சமையல் கலைஞர்களை ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்தோனேசியா சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் சவுதி அரசர் சல்மான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments