ராணுவ வீரர்களை உயிரோடு கொளுத்தும் தீவிரவாதிகள்: பதறவைக்கும் வீடியோ

Report Print Aravinth in மத்திய கிழக்கு நாடுகள்

துருக்கி ராணுவ வீரர்களை உயிருடன் கொளுத்துவது போன்ற கொடூர வீடியோ காட்சியை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளன.

இதனால் பயங்கர ஆத்திரத்தில் இருக்கும் ஐ.எஸ் அமைப்பினர் தற்போது துருக்கி ராணுவ வீரர்கள் இருவரை உயிருடன் எரிப்பது போன்ற வீடியோ காட்சியை வெளியிட்டு உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.

அந்த வீடியோ காட்சியில், ராணுவ வீரர்கள் இருவரையும், ஒரு கூண்டுக்குள் நிறுத்தி வைத்து பின்னர் உயிருடன் தீயிட்டு எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவானது அலெப்போ மாகாணத்தில் படமாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், கடந்த மாதம் ஐ.எஸ் அமைப்பின் அமக் இதழில் இரு துருக்கி ராணுவ வீரர்களை கடத்தியுள்ளதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments