மனித வெடிகுண்டாய் 7 வயது சிறுமி! ஒரு நொடியில் நேர்ந்த பயங்கரம்

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

சிரியா நாட்டின் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினரிடயே போர் தொடர்ந்து வரும் சூழலில், சிரியாவின் தலைநகரான Damascusவில் ஒரு காவல் நிலையத்தை சீர் குலைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் ஏழு வயது சிறுமி ஒருத்தி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்த காவலரிடம் அங்குள்ள கழிவறையை உபயோகப்படுத்த அனுமதி கேட்டுள்ளார்.

பின்னர் சிறுமி, கழிவறைக்குள் சென்றதும் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. பின்னர் தான் அந்த சிறுமியின் இடுப்பில் வெடிகுண்டு இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், வெடிகுண்டு வெடித்ததில் காவல் நிலைய கட்டிடம் தரைமட்டமாகிவிட்டது, அந்த சிறுமியும் இறந்து விட்டார், மேலும் பலர் இறந்திருக்கலாம் என கருதுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையில், சிறுமி தற்கொலை படையை சேர்ந்தவரா அல்லது தீவிரவாதிகள் அவரிடம் பொய் சொல்லி வெடிகுண்டை கொடுத்து அனுப்பினார்களா என விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments