சவுதி அரேபியாவில் உள்ள சந்தை ஒன்றில் நபர் ஒருவர் அழைத்து வந்த புலி அங்கிருந்த 5 வயது சிறுமி மீது பாய்ந்து கவ்வ எத்தனித்த சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
சவுதி அரேபியாவில் பரபரப்பான சந்தை ஒன்றில் நபர் ஒருவர் தமது வளர்ப்பு பிராணியான புலியை அழைத்து வந்துள்ளார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த சந்தையில் முக்கிய நடைபாதை வழியாக புலியுடன் நடந்து சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பாதை வழியாக 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தமது குடும்பத்தினருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அதுவரை தமது உரிமையாளருடன் மெதுவாக மிகவும் சாதுவாக நடந்து சென்றுகொண்டிருந்த புலியானது திடீரென்று குறித்த சிறுமியின் மீது பாய்ந்து கவ்வ எத்தனித்துள்ளது.
இதில் அந்த சிறுமி நொடிப்பொழுதில் உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்த பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. பாதுகாப்பு மற்றும் உரிய நடைமுறைகள் எதுவும் சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கடைபிடிக்க தவறியது ஏன் என்ற கேள்வியை பொதுமக்களில் பலரும் எழுப்பியுள்ளனர்.
பனிய வைக்கப்பட்ட புலி என்றாலும் கூட குறித்த சம்பவத்தை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று ஒருவர் கோபமாக கேட்டுள்ளார்.
காட்டு விலங்குகளை சமகால இளைஞர்கள் வீட்டு பிராணிகளாக வளர்த்து வருவது கண்டிக்கத்தக்க விடயம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்