2000 ஆண்டுகள் பழமையான கல்லறை! அழுகிப் போகாத சடலங்கள்

Report Print Maru Maru in மத்திய கிழக்கு நாடுகள்

சீனாவில் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் 113 முன்னோர்களின் உடல்கள் களிமண் தொட்டிகளுக்குள் அடக்கம் செய்து பதப்படுத்தப்பட்டுள்ளன.

இதை கண்டுபிடித்த சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் தங்கள் முன்னோர்களின் செயலை வியந்துள்ளனர்.

2000 ஆண்டுகளுக்கு முன்பே மட்பாண்டங்களில் வைத்து புதைக்கும் சடங்கு சீனாவில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்திருப்பதால் முக்கியத்துவமாக நினைக்கின்றனர்.

அந்த கல்லறையில் குழந்தைகள் உடல்கள் மட்டுமே இந்த முறையில் புதைக்கப்பட்டுள்ளது. அதில் 6 பேர்களுடைய உடல் மட்டுமே பருவ வயதுடையதாக இருந்தன.

வடக்கு சீனாவில், ஹெபெய் மாகாணத்தில் ஹாங்குவா நகரில் இந்த கல்லறைப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு களிமண் பாண்டாங்களை உடல்களுக்கு உறைபோல செய்து புதைத்துள்ளனர்.

ஒவ்வொரு உடலுக்கும் இரண்டு அல்லது மூன்று மட்பாண்டங்களை பயன்படுத்தியுள்ளனர். அந்த மட்பாண்டங்களில் ஒரு இடத்தில் மட்டும் சிறு துளையும் போட்டுள்ளனர்.

அது அவர்களுடை ஆன்மா அந்த துளைவழியாக வந்து போகும் என்ற நம்பிக்கையாம். இது உலகில் இதுவரை எங்கும் காணப்படாத ஒரு ஈமச்சடங்கு முறையாகும்.

தொல்லியல் ஆய்வாளர்கள் கடந்த மே மாதம் 6 கல்லறைகள் மட்டுமே கண்டுபிடித்தனர். பிறகு, 100க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கலாம் என கூறியிருந்தனர். விரிவான ஆய்வில் இப்போது 113 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சீன வரலாற்று ஆசிரியர்கள், கூறும்போது, இந்த கலாச்சாரம் கி.மு. 202 ல் மேற்கத்திய பகுதியில் வாழ்ந்த ஹான் வம்சத்துக்கு உரியது என கணித்துள்ளனர்.

2000 ஆண்டுகளை கடந்தும் அதில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெட்டுப்போகாமல் காணப்படுவது. அவர்களிடம் சிறந்த அறிவியல் அறிவே இருந்திருப்பதை உணர்த்துகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments