மறைமுக போரை நிறுத்தல் வேண்டும்- பராக் ஒபாமா

Report Print Abhimanyu in மத்திய கிழக்கு நாடுகள்

தமது அண்டை நாடுகள் மீது மறைமுக போரில் ஈடுபடும் நாடுகள் அதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்து வெளியுட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற (20) ஐக்கிய நாடுகள் அவையிலேயே பின்வருமாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார், மத்திய கிழக்கு நாடுகளுகளில் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் வன்முறைகளை தூண்டி நாட்டை சீர்குலைப்பதோடு பிற நாடுகளுக்கும் வன்முறையை பரப்புகின்றது.

வேறுபட்ட மத சமூகம் அல்லது இனங்கள் இணக்கமாக செயல்படுமாறு வெளியில் உள்ள சக்திகள் கட்டாயப்படுத்த முடியாது.

சமூகங்கள் இணக்கமாக செயல்படுவது எப்படி? என்பதற்கான விடை கிடைக்கும் வரை பயங்கரவாதம் தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கும்.

கணக்கில் அடங்காத மனித உயிர்கள் பாதிக்கப்படுவதோடு பயங்கரவாதமும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

நாம் முரண்பாடுகளை கொண்ட அனைத்து சமூகங்களும் அமைதியின்மையை ஏற்படுத்தும் மறைமுகப்போரை நிறுத்திக்கொண்டு மனித நேயத்துடன் வாழ வலியுறுத்த வேண்டும்.

“ஜெய்ஷ் இ முகம்மது”, “லஷ்கர் இ தொயா” போன்ற இயக்கங்களுக்கு ஆயுத உதவி மற்றும் நிதி உதவி போன்றவை பாகிஸ்தான் வழங்கி பயங்கரவாதத்தை ஊக்குவித்து மறைமுகப்போரை நடத்துகின்றது என இந்தியா குற்றம் சாட்டி வரும் நிலையில் ஒபாமாவின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments