பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியுங்கள்! மனு அளித்த முஸ்லிம் பெண்

Report Print Printha in மத்திய கிழக்கு நாடுகள்

அபுதாபியில் அராபிய பெண் ஒருவர் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதிக்க கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் பெண்ணாக மாறுவதற்கும், பெண் ஆணாக மாறுவதற்கும் நம் உடம்பில் உள்ள குரோமோசோம்களின் குளறுபடியே காரணம்.

இந்த மாதிரியான உடலமைப்பில் இருக்கும் சில பாலினத்தவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதை விரும்புகின்றனர், இதனை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ளது.

இதுகுறித்து பெண்ணின் வக்கீல் கூறுகையில், அந்த பெண்ணுக்கு மூன்று வயதாக இருந்த போதே தான் ஆண் என்பதை நம்புவதாகவும், அந்த மனநிலைக்கு ஏற்ப கடந்த சில ஆண்டுகளாக உளவியல் மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகளை எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பெண் நீதிமன்றத்தில் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கொடுத்த மனுவின் மீதான விசாரணை வரும் 29-ம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments