தீவிரவாதியாக விரும்புகிறோம்: சிறுவர்கள் பேசும் அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

எங்கள் குறிக்கோள் தீவிரவாதிகள் ஆவது என பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேசும் அதிர்ச்சி வீடியோவை ISIS வெளியிட்டுள்ளது.

ISIS தீவிரவாத இயக்கத்தினர் மூளை சலவை செய்து பல இளம் சிறுவர்களின் வாழ்க்கையை அழித்து வருகின்றனர்.

சிறுவர்கள் பேசியுள்ள அந்த வீடியோவில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஒரு சிறுவன் கூறுகையில், நான் அல்லாவின் நிமித்தபடி தியாகியாக விரும்புகிறேன். நபிகள் நாயகம் சொல்படி யார் இறுதி வரை நேருக்கு நேர் நின்று சண்டையிடுகிறார்களோ அவரை தான் அல்லா விரும்புவார் என கூறியுள்ளான்.

தன் சகோதரனை போல தியாகத்தை கோரும் மத அறிஞர் ஆக விரும்பிவதாக இன்னொரு சிறுவன் தெரிவித்துள்ளான்.

இன்னொரு காட்சியில் சிறுவன் ஒரு பெரியவரிடம் நபிகள் நாயகம் சொல் படி நீங்கள் மீசையை எடுத்து விட்டு தாடியை மட்டும் வளருங்கள் என கூறுகிறான்.

அந்த வீடியோ காட்சிகளில், பல்வேறு சிறுவர்கள் குரான் படிப்பது போலவும், நீச்சல் குளத்தில் விளையாடுவது போலவும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது போலவும் காட்சிகள் உள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments