வெடிகுண்டு இணைக்கப்பட்ட கைப்பேசி: சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

சிரியா போராளிகள் வெடிகுண்டு இணைக்கப்பட்ட கைப்பேசியில் செல்பி எடுக்க முற்படுகையில் விபரீத சம்பவம் நடந்துள்ளது.

சிரிய சுதந்திர போராளிகள் 8 பேர் ஒரு அறையில் தங்கியிருந்துள்ளனர், அப்போது அவர்களில் ஒருவர் வெடிகுண்டுடன் இணைக்கப்பட்ட தன் கைபேசியில் எல்லாலோருடனும் இணைந்து செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

பட்டனை அழுத்தியவுடன் அதில் இணைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.

இந்த சத்தம் கேட்டு, பக்கத்து அறையில் இருந்தவர்கள் ஒடி வந்து இது சிறிய ரக வெடிகுண்டு என்றும் இதை கிளர்ச்சியாளர்களும், ISIS யை சேர்ந்தவர்களும் பயன்படுத்துவார்கள் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் வெடிகுண்டு விபத்தில் சிக்கிய போராளிகள் உயிரிழந்துவிட்டார்களா? அல்லது அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments