பெண்களை கவர ஐ.எஸ் புதிய திட்டம்!

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்
212Shares

ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் முதன் முறையாக பெண் செய்தித் தொடர்பாளரை பயன்படுத்தி பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கென மெஜஸ்டிக் என்னும் இதழை ஆரம்பித்துள்ளனர். இந்த இதழ் இணையதளத்தில் பின்பற்றுபவர்களுக்கும், ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் விநியோகிக்கப்படுகிறது.

இயக்கத்தில் புதிய பெண் உறுப்பினர்களை சேர்க்க பெண்களை கவரும் வகையில் ஐ.எஸ் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த வீடியோவில் பெண் ஜிகாதி ஒருவர், ஷரியா சட்டத்தின் படி முழு நீள கருப்பு உடைகளை அணிந்து பேசுகிறார். இதனால் குறித்த பெண்ணின் அடையாளம் வெளிப்படவில்லை.

பெண்களுக்கான இதழை தொடர்ந்து பெண்னை பயன்படுத்தி ஐ.எஸ் வெளியிட்டிருக்கும் முதல் வீடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய மதிப்பீடுகளின் படி, சுமார் 50க்கும் மேற்பட்ட பிரித்தானியா பெண்கள் ஐ.எஸ் இயக்கத்தில் இணைய சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு பயணித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments