மனதை உருக்கும் புகைப்படம்! பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்

Report Print Fathima Fathima in மத்திய கிழக்கு நாடுகள்
1360Shares

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போருக்கு லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் உள்நாட்டு போரினால் செத்து மடிந்தவர்கள் ஏராளம்.

இந்நிலையில் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் ரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் உடல் முழுவதும் ரத்த வழிந்தோடிய நிலையில் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் உள்ளது, இவனை சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் இந்த படம் சிரியாவில் நடக்கும் கொடூரங்களுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments