உளவாளியை கொன்று தொங்கவிட்ட ஐ.எஸ்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்
610Shares

சிரியாவில் பலவீனமடைந்து வரும் ஐ.எஸ் தீவிரவாத குழு உளவு பார்த்தாக கூறி ஒரு இளைஞனை கத்தியால் இதயத்தில் குத்தி, தலையில் சுட்டுக் கொன்று அந்தரத்தில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் தனது தலைநகர் என கூறி வரும் ரக்கா பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Mohammedal-Kadri என்ற நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவர் ஐ.எஸ்க்கு எதிரான குழுவிற்காக உளவு பார்த்து வந்ததை கண்டறிந்த ஐ.எஸ் குழுவினர், அவரை கொன்று பொது இடத்தில் தொங்கவிட்டுள்ளனர்.

மேலும், அவர் கழுத்தில் இவன் இஸ்லாமியத்திற்கு எதிராக குற்றம் புரிந்தவன் என எழுதி தொங்கவிட்டுள்ளனர்.

கடந்த வாரமும் இதே போல் ஒரு உளவாளியை கொன்ற ஐ.எஸ், உடலை கற்களை கொண்டு எறிய, துப்பாக்கியை கொண்டு சுட சொல்லி குழந்தைகளை ஊக்குவித்துள்ளது.

அப்போது ஒரு குழந்தை பறவைகளை சுடும் தூப்பாக்கியை கொண்டு வந்து உடலை நோக்கி சுட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

ஐ.எஸ் எதிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து குழந்தைகள் மத்தியில் வன்முறை செயல்களை ஊக்குவித்துவருவது கண்டிக்கதக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments