முள்ளங்கியில் இத்தனை மருத்துவ பயன்களா ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Report Print Kavitha in மருத்துவம்
312Shares

நாம் தினமும் உண்ணும் காய் வகைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதே போல் முள்ளங்கியில் சமையலுக்கு பயன்படுவதையும் தாண்டி பல மருத்துவ நோக்கங்களையும் கொண்டுள்ளது. அதனால் இதை ஆரோக்கியமான உணவு என்றே சொல்லலாம்.

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன.

முள்ளங்கியின் இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் விதைகள் என தாவரத்தின் அனைத்து பகுதிகளும் உணவாக பயன்படுகின்றன.

அந்தவகையில் முள்ளங்கியை சாப்பிடுவதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

  • தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
  • முள்ளங்கிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இருதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.
  • முள்ளங்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் இயற்கை நைட்ரேட்டுகளின் நல்ல மூலமாகும். முள்ளங்கி இயற்கையாகவே அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை எளிதாக்குவதாகும். அத்துடன் உடலிலும் இருக்கும் கழிவுகளை குடல் வழியாக வெளியேற்ற உதவுகிறது.
  • முள்ளங்கியில் ஏராளமான குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் சல்பர் கலவைகள் உள்ளன. புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றங்களிலிருந்து உயிரணுக்களைப் பாதுகாக்கும் திறன் இதற்கு உண்டு.
  • புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தூண்டும் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதே இதன் முக்கியபங்கு. உடலில் இருந்து புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை அகற்ற உதவுகிறது.
  • எப்படிப்பட்ட மூல நோயையும் தினந்தோறும் முள்ளங்கி காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்