தலைவலியை எளிய முறையில் குணமாக்க இதோ சில சித்த வைத்தியம்!

Report Print Kavitha in மருத்துவம்
221Shares

தலைவலி வந்துவிட்டால் எந்த வேலையும் சரியாக ஓடாது. மற்றும் உடல்நிலையையும் மிக சோர்வாக உணர வைக்கும் இந்த தலைவலி.

தலைவலியை வந்துவிட்டாலே போதும் பலர் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவதுண்டு.

இருப்பினும் இதனை சில வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தீர்க்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வெற்றிலை காம்பு, லவங்கம், ஆலரிசி சமஅளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றி பொட்டில் உச்சந்தலையில் தடவ தலைவலி குணமாகும்.

  • விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி அகலும்.

  • எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி போகும்.

  • தேத்தாங் கொட்டையுடன், பச்சை கற்பூரத்தையும் சேர்த்து தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுபோட ஒற்றை தலைவலி குணமாகும்.

  • மருக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டுப்போட உடனே தலைவலி நிற்கும்.

  • மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து தாய்ப்பால் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே குணமாகும்.

  • மிளகை மைய தேய்த்து எடுத்து அதை எலுமிச்சம் பழச் சாற்றில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

  • குங்குமப்பூ வாங்கி வந்து தாய்ப்பால் விட்டு மைய உரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே நிற்கும்.

  • முற்றிய வெற்றிலையின் நுனி பகுதியை சிறிது எடுத்து நெற்றிப்பொட்டின் இருபுறமும் ஒட்டினால் தலைவலி குணமாகும்.

  • எட்டிக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்