தொண்டை சம்பந்தமான பிரச்சனைக்கு எளிதில் தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

Report Print Kavitha in மருத்துவம்

நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, அதிக உமிழ்நீர் வடிதல், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் வருடத்தில் பல தடவைகள் வந்து போவதுண்டு.

இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு அவ்வப்போது கிடைக்கின்ற தற்காலிக நிவாரணிகளை எடுத்து கொள்வது பழக்கமாகிவிட்டது.

இருப்பினும் இப்படி தற்காலிக நிவாரணிகளை எடுப்பதனால் சிலசமயங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அந்தவகையில் தற்போது தொண்டை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய சில இயற்கை வைத்தியங்கள் பார்ப்போம்.

  • எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து, அதை சூடு படுத்தி, சிறிது தேன் கலந்து, நாள் ஒன்றுக்கு 3 வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு, உட்கொள்ள வேண்டும். இதனால் தொண்டை, வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.

  • மாதுளை இளைச் சாற்றில், சில துளிகளை மூக்கில் விட்டால், மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

  • சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப் பொடித்து, பசும் பாலில் கலந்து உட்கொண்டால், தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.

  • பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து, நெருப்பு அனலில் இட்டு, புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

  • வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றைப் பருகினால், வறட்டு இருமல் குணமாகும்.

  • துளசி இலைச்சாறு 150 மில்லி, கற்கண்டு, இவை இரண்டையும் கலந்து, சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீ ஸ்பூன் அளவு, தினசரி இருவேளை உட்கொண்ட பின், பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும்.

  • தேனையும், எலுமிச்சை பழ சாற்றையும், சம அளவில் உட்கொண்டால், சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்