உடலை உள்ளிருந்து சரிசெய்திட வேண்டுமா? இந்த ஆயுர்வேத பொருட்களை போதும்!

Report Print Kavitha in மருத்துவம்

இயற்கையில் உருவாகும் அனைத்து பொருட்களுக்குமே ஓர் மருத்துவ குணம் இருக்க தான் செய்கிறது.

அதனை எப்போது, எப்படி உபயோகிக்க வேண்டுமென்பது என்பதை அந்தகாலத்திலே நமது முன்னோர்களால் கண்டறியப்பட்டன. இவை இன்று கூட பல மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

சிறு தலைவலி என்றால் கூட அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு வைத்தியம் பார்க்க முடியும்.

அந்தவகையில் உடலை உள்ளிருந்து சரிசெய்ய உதவக்கூடிய சில பொருட்களைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்..

  • தண்ணீருடன் எதனை கலந்து பருகினாலும், அதன் பண்புகளை அப்படியே கொண்டு சேர்க்கிறது. இஞ்சி சேர்த்து தண்ணீர் குடித்தால், அதன் வெப்ப பண்புகளின் காரணமாக செரிமானம் சீராகும். ஏலக்காய் சேர்த்தால், அது குளிர்ச்சியாக மாறினாலும், செரிமானத்திற்கு உதவும்.
  • தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்வதற்கு சரியான நேரம் விடியற்காலை தான். ஒரு சிட்டிகை மிளகு தூளுடன் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவும்.
  • மிளகு செரிமானத்திற்கு உதவுவதோடு, உண்ட உணவு உடலில் உறிஞ்சப்படுவதற்கும் உதவுகிறது. நமது உடலின் வளர்சிதை மாற்றம் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதற்கு உதவும் முக்கிய இயற்கை பொருட்களில் ஒன்று தான் மிளகு.
  • கற்றாழை, குளிர்ந்த தன்மை மற்றும் விரைவில் குணப்படுத்தும் தன்மை பெற்றிருப்பதற்கு காரணம் நிறைய நல்ல ஆன்டி ஆக்ஸிடன்ட்களை தன்னுள் கொண்டிருப்பது தான்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு உதவும் சிறந்த இயற்கை பொருள் இஞ்சி. அதற்கு, இஞ்சியுடன் சேர்த்து வெல்லம் மற்றும் சிறிது மிளகு சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
  • உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள மல்லி விதைகள் பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமின்றி, உடலின் வளர்சிதை மாற்றத்தையும் சீராக பாதுகாக்கிறது.
  • ஆன்டி ஆன்ஸிடன்ட் நிறைந்த ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்று மஞ்சள். இது நோய் எதிர்ப்பு சக்தியை சிறந்ததாக வலுப்படுத்தி, உடலின் செல்கள் அவற்றின் ஆற்றலை ஓட்டத்தை சீராக்கவும் அனுமதிக்கிறது.
  • சிறந்த செரிமானத்திற்கு வெற்றிலை பெரிதும் உதவக்கூடியது. மேலும், இது முழு உயிரணு திசுக்களுக்கும் மற்ற பொருட்களை எடுத்துச் செல்லும் ஒரு ஊடகமாக விளங்குகிறது.
  • சீரகம் விதைகளில் செரிமானம் மற்றும் கார்மினேட்டிவ் பொருட்கள் உள்ளன. இது குடலை ஆரோக்கியமாக மாற்றுவதற்கு சிறப்பாக உதவுகிறது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்