சொறி சிரங்கு என்பது தோலின் ஒரு ஒட்டுண்ணி தொற்றாகும். இது தோல் காய்ந்து (வரண்டு), அரிப்புடன் கூடிய சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான செதில்கள் போன்ற தடிப்பு காணப்படும்.
வெப்பம், மனஅழுத்தம், கவலை மற்றும் சொறிவதனால் ஏற்படும் புண் காயங்கள் அரிப்பை அதிகரிக்கும்.
இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை செய்தாலே போதும். தற்போது அதனை பார்ப்போம்.
- சிரங்கை குணப்படுத்த தேங்காய் எண்ணெய்யை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம். இது தோலை மிகவும் மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
- ஒரு டீஸ்பூன் சந்தனம் மற்றும் ஒரு டீஸ்பூன் கற்பூரம் இரண்டையும் சேர்த்த கலவையை சிரங்கு புண் இருக்கும் இடத்தில் தடவினால் அரிப்பு குணமடையும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை இழையும் சேர்த்து அரைத்து, அதை இந்த சிரங்கின் மேல் தடவி வர விரைவாக குணமடையும்.
- ஒரு இரும்பு பாத்திரத்தில் 200 கிராம் கடுகு எண்ணெய் மற்றும் 50 கிராம் வேப்பிலையை சேர்த்து, அந்த இலை கருப்படையும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை குளிர வைத்து, தினமும் 4 முறை சிரங்கு புண்ணில் தடவ குணமடையும்.
- பப்பாளி பழ விதையை நன்றாக பிசைந்து, அந்த விழுதை தடவ சிரங்கு புண்ணால் ஏற்படும் அரிப்பிற்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். புதினா இலையை கையில் பிழிந்து அந்த சாறை தடவலாம்.