தைராய்டு பிரச்சினையால் உடல் எடை அதிகளவில் கூடுகிறதா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்

Report Print Nalini in மருத்துவம்
883Shares

உலகம் முழுவதும் 20 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தைராய்டு சுரப்பியால் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தைராய்டு பிரச்சினை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இதில் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்து விடுமாம்.

இதற்கு காரணம் போதுமான தைராய்டு சுரப்பி சுரக்கப்படாதது தான் இதற்காக காரணமாக உள்ளது.

ஹைப்போ தைராய்டிசம் கொண்ட நபர்கள் உடல் எடையை குறைக்க சில இயற்கை வழிகளை பின்பற்றலாம். அவை என்னவென்று பார்ப்போம்

  • இந்த முறைகள் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்குமாம்.
  • மருத்துவரை அணுகி தைராய்டு செயல்பாடு சீராக இருக்க சிகச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உங்களுக்கு உதவி செய்யும்.
  • சரியான அளவில் நேர நேரத்துக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தாலே போதும் தைராய்டு ஹார்மோன் சுரப்பு கட்டுக்குள் வந்து விடும்.
  • உடம்பில் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம். இதுவும் உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி செய்யும்.
  • தண்ணீர் உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவி செய்யும். பசியை குறைத்து சீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
  • உணவுப் பழக்கம் மட்டும் உங்கள் உடல் எடையை குறைக்காது. அதனுடன் சேர்த்து உடற்பயிற்சியும் செய்யும் போது உடல் எடை வெகுவாக குறைய வாய்ப்புகள் இருக்கும்.
  • உணவை பிரித்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். 3 வேளையாக சாப்பிடாமல் 5 வேளையாக சாப்பிட வேண்டும்.
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை எடுப்பதும் அவசியம். அதிகமாக இனிப்பை சாப்பிட வேண்டாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்