நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் வழி இதுதான்..!!

Report Print Nalini in மருத்துவம்
708Shares

வெந்தயம் (ட்ரைகோநெல்லா பொயெணம் க்ரெகும்) தெற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் தாவிர வகை. இது பழுப்பு மற்றும் அடர்ந்த மஞ்சள் வண்ண விதைகளை கொண்ட செங்குத்தாக வளரும் வருடாந்திர செடி.

இந்தியில் மேத்தி எனவும், தமிழில் வெந்தயம் எனவும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக தென்னிந்திய மற்றும் வட இந்திய சமையலிலும், பாட்டி வைத்தியத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

சத்துகள்

 • வெந்தய செடியின் விதைகளும், இலையும் மிகுந்த நறுமணமும், சுவையும் கொண்டது. விதைகள் சிறிது துவர்ப்பு சுவை கொண்டது.
 • ஆனால் வறுத்து உபயோகிக்கும் போது இதன் துவர்ப்பு சுவை மாறிவிடுகிறது. இதில் தையமின், போலிக் அமிலம், ரிபோபிளேவின், நியாசின், வைட்டமின் A, B6, C இவற்றுடன் தாமிரச் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம், செலினியம், துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் நிறைந்து காணப்படும்.
 • வெந்தய கீரையில் வைட்டமின் K அதிக அளவில் இருக்கிறது.

வெந்தயத்தின் பலன்கள்

 • வெந்தயத்தில் ட்ரைகோனெலின், லைசின் மற்றும் எல்-டிரிப்டோபான் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. விதைகளில் அதிக அளவு சப்பொனின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன.

கொழுப்பைக் குறைக்கிறது

 • கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ள கொழுப்பை அதிக அளவில் நம் உடல் கிரகிக்காமல் செய்ய வெந்தயத்தில் உள்ள சபோனின்கள் உதவி செய்யும்.
 • LDL எனப்படும் கெட்ட கொழுப்பை நம் உடல் உற்பத்தி செய்யாமல் தடுப்பதில், இந்த சபோனின்களின் பங்கு மிகவும் அவசியம்.
 • உதாரணமாக, மைசூர், சி.எஸ்.ஐ.ஆர், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் இருந்து ரெட்டி மற்றும் ஸ்ரீனிவாசன், எலிகளை பயன்படுத்தி செய்த ஆராய்ச்சியில் பித்தப்பையில் இருந்த கொழுப்புக் கற்களைக் கரைக்க வெந்தயம் பயன்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இவர்கள் வெந்தயம் கொழுப்புகளை குறைப்பதை உறுதிப்படுத்தினார்கள்.

நீரிழிவை கட்டுப்படுத்துகிறது

 • வெந்தயத்தில் மட்டுமே காணப்படும் மிக அரிதான அமினோ அமிலம் (4HO-Ile) ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஹைபர்கிளசிமிக் நிலைமைகளின் கீழ் இன்சுலின் சுரக்க உதவி செய்கிறது.
 • க்யூம் பல்கலைக்கழகத்திலிருந்து ஈரானிய ஆய்வாளர்கள் டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்களின் சிகிச்சைக்கு அமினோ அமிலம் (4HO-Ile) தேவையான ஒன்று என்று கண்டுபிடித்தனர்.

எடையை குறைக்க வெந்தயம்

 • எடை குறைப்பிற்கு ஒரு வரப்பிரசாதம். இந்த தெர்மோஜெனிக் மூலிகை பசியை அடக்கி எடை குறைப்புக்கு வழி வகுக்கிறது. குறைந்த நேரத்திலேயே சக்தி அதிகரிக்க செய்கின்றன.
 • கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை மாற்றியமைக்கிறது. வெந்தயம் சமையலுக்கு உதவுவதோடு, பலவகைகளிலும் ஒரு நல்ல இயற்கையான தீர்வாக உள்ளது.
 • இந்தியா, சீனா மற்றும் கிழக்கிந்திய நாடுகளில் பாரம்பரியமாக வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வைட்டமின் E அதிகமுள்ள வெந்தயம் ஊறுகாய் கெடாமல் பதப்படுத்த உதவுகிறது. உலர்ந்த வெந்தய கீரை அசைவ உணவுகளில் மற்றும் சைவ சுவையூட்டியாக பயன்படுகின்றன.
 • வெந்தயம், தேன், எலுமிச்சை சேர்த்த மூலிகை தேநீர் காய்ச்சலை சரி செய்ய உதவுகிறது. குழந்தை பிறப்பு சமயங்களில் கருப்பையில் வலியை தூண்டி பிரசவத்தை எளிதாக்குகிறது பாரம்பரியமாக எக்ஸிமா, தீப்புண்கள், ரத்தக்கட்டிகள், கீல்வாதம் போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படும்.
 • பெண்களுக்கு ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதற்கும் மார்பகங்களை பெரிதாக்குவதற்கும் பரிந்துரைக்கப்படுகின்றன.
 • பிரெஷான வெந்தய கீரை இலைகளை அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் முடி செழுமையாக வளரும். பொடுகுத்தொல்லை நீங்கி விடும்.

பக்க விளைவுகள்

 • மிக அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இதில் உள்ள டெராடோஜெனிக் ஆற்றல் காரணமாக பிறவிக் குறைபாடுகள் ஏற்படும்.
 • கர்ப்ப காலத்தில் வெந்தயம் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். வெந்தயம் உள் ரத்தப்போக்கிற்கு காரணமாக இருக்கும்.
 • தோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை ஆகியவை வெந்தயத்தால் ஏற்படுவதாக சொல்லப்படுகின்றன.
 • கடுமையான ஒவ்வாமையின் அறிகுறிகள் மார்பு வலி, முக வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் அல்லது விழுங்குவதில் சிக்கல் ஏற்படுகின்றன.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்