இரவு தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் : கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

Report Print Nalini in மருத்துவம்

ஆப்பிள் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருளாகும்.

இதில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் நல்ல கனவைப் பெற உதவும் கனிமச்சத்துக்கள், அன்டி-ஓக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. ஆகவே இரவில் உங்களுக்கு திடீரென்று பசி எடுத்தால், அப்பிள் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

இரவு தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்

  • இரவு தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும்.
  • இரவு தூங்கும் முன் ஒரு ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.
  • இரவு தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக ஆப்பிள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கிறது.
  • ஆப்பிள் உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுவதோடு, பக்டீரியாக்களை சமநிலையில் பராமரித்து, உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகம் உறிஞ்ச செய்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது.
  • ஆப்பிள் உடல் பலவீனத்தைக் குறைத்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் அன்றாடம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்.
  • ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள், உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுக்களை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றஇறக்கம் ஏற்படுவது குறைக்கும்.
  • ஆப்பிளை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அதில உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூச்சுக்குழாய்களில் உள்ள அழற்சியைக் குறைத்து, சுவாச பிரச்சனைகள் வருவதைத் தடுக்கிறது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்