6 நாட்களில் முழங்கால் வலிக்கு விடுதலை தரும் பானம்

Report Print Nalini in மருத்துவம்

உடலிலேயே முழங்கால் மூட்டுக்கள் மிகவும் பெரிய மற்றும் சிக்கலான மூட்டுக்கள்தான். முழங்கால் எலும்புகள் தசைநார்களால் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் முழங்கால்களுக்கு ஸ்திரத்தன்மை வழங்கப்படுகிறது.

மேலும் தசை நார்கள் முழங்கால் எலும்புகளை கால் தசைகளுடன் இணைத்து, முழங்கால் மூட்டுக்களின் அசைவிற்கு உதவி செய்கிறது. உடலில் முழங்கால் மூட்டுக்கள் சிக்கலான ஒன்றாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.

ஒருவர் நடப்பதற்கு, ஓடுவதற்கு, நிற்பதற்கு, குதிப்பதற்கு என அனைத்து செயல்பாட்டிலும் முழங்கால் மூட்டுக்கள் முக்கிய பங்காற்றுகிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வயது அதிகரிக்கும் போது முழங்கால் மூட்டுக்கள் தேய்மானம் அடைய ஆரம்பித்து கடுமையான முழங்கால் மூட்டு வலியை உண்டாக்கும். ஒருவரது முழங்காலின் வலிமை குறைவதற்கு பல காரணங்கள் இருகின்றன.

முழங்கால் மூட்டுக்களில் ஏற்பட்ட காயங்களால் சந்திக்கும் வலியைக் குறைக்க ஓர் அற்புத பானம் உள்ளது. இந்த பானத்தை ஒருவர் குடித்து வந்தால், அது முழங்கால் தசைநார்களுக்கு வலிமை அளித்து, மூட்டு வலியை போக்க உதவி செய்யும்.

முழங்கால் மூட்டு வலிகளிலிருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்

தேவையான பொருட்கள்

 • அன்னாசி துண்டுகள் – 2 கப்
 • தேன் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
 • ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
 • ஓட்ஸ் – 1 கப்
 • பாதாம் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
 • பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்
 • தண்ணீர் – 1 கப்

செய்முறை

 • முதலில் ஓட்ஸை எப்போதும் போன்று சாதாரணமாக வேக வைத்து எடுத்துக் கொண்டு, பின் அதில் சிறிது சுடுநீரை ஊற்றி, குளிர வையுங்கள்.
 • பின்பு அதில் அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை சேர்க்க வேண்டும்.
 • அடுத்து அதில் பாதாமை தட்டிப் போட்டு, பின் மிக்ஸியில் ஆரஞ்சு ஜூஸ், தேன், தண்ணீர் மற்றும் பட்டைத் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
 • பிறகு அதில் ஓட்ஸை சேர்த்து சில நிமிடங்கள் அரைத்துக் கொள்ள வேண்டும்.
 • இந்த பானத்தை தினமும் குடித்து வர நல்ல முன்னேற்றம் நமக்கு தெரியும்.

குறிப்பு:

 • இந்த பானத்தை ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், 15 நாட்களில் இதுவரை மூட்டுக்களில் சந்தித்து வந்த வலி முற்றிலும் நீங்கி விடும்.
 • இனிமேல் முழங்கால் மூட்டு வலி வராமல் தடுக்கப்படும். இதன் விளைவாக அன்றாட செயல்பாடுகளில் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளும் சரியாகி விடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்