சகல நோய்க்கும் எளிதில் தீர்வளிக்கும் பாட்டி வைத்தியம் இதோ!

Report Print Kavitha in மருத்துவம்

ஆங்கில மருந்துகளை விட உடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய அந்த காலத்தில் நமது முன்னோர்கள் கையாண்டு வந்த பாட்டி வைத்திய குறிப்புகளே!

அந்தவகையில் தற்போது நாம் நோயின்றி வாழ்வதற்கு உகந்த சில பாட்டி வைத்திய குறிப்புக்கள் இதோ!

  • வேப்பம் பூவுடன் மிளகு சீரகம் சேர்த்து உண்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.

  • காலையிலும், இரவிலும் காய்ச்சியப் பசும்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும்.

  • கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

  • மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி, எலும்பு உறுதி, பற்கள் கெட்டிப்படும்.

  • அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் மறையும்.

  • மாதவிடாய் காலங்களில் கோதுமை கஞ்சி சாப்பிட்டு வர உடற் சோர்வு நீங்கி பலம் பெறும்.

  • பல் ஈறுகளை ஆட்காட்டி விரல்களால் நன்றாக அழுத்திக் கொடுக்க இரத்த ஒழுக்கு நிற்கும். ஆடும் பல் கூட உறுதியாகும்.

  • வில்வ இலையின் தளிரை வதக்கி இளம் சூட்டுடன் கண்களின் மீது ஒத்தடம் கொடுக்க கண் வலி, கண் சிவப்பு, அரிப்பு நீங்கும்.

  • சப்போட்டா பழத்தை தினம் பகல் பொழுதில் சாப்பிட்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

  • மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்