பெரியம்மை அல்லது சின்னம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு இதோ சில எளிய மருத்துவம்!

Report Print Kavitha in மருத்துவம்

அம்மைநோய் என்பது முதுவேனில்காலம் அல்லது வெய்யில் காலத்தில் கடும் வெப்பத்தால் மக்களைத் தாக்கும் கொப்புள நோய் ஆகும்.

முதலில் இது சாதாரண காய்ச்சல் போல தான் துவங்கும். ஆனால் ஓர் இரு நாளில் காய்ச்சல் கடுமையாகும், கை, கால் வலி, தலைவலி போன்றவை ஏற்படும்.

அதோடு உடலில் ஆங்காங்கு அரிப்பு ஏற்பட்டு சிறு சிறு கொப்பளங்கள் வர துவங்கும்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவதால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும்.

அந்தவகையில் தற்போது அம்மை நோயை குணப்படுத்த கூடிய சில எளிய மருத்து முறைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

medicalnewstoday

 • தட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் பாகல் இலைச்சாறில் மஞ்சள் பொடி கலந்து குடித்துவர அம்மை வேகம் தணிந்து விரைவில் குணமாகும்.

 • கடுக்காயை நீரில் ஊறவைத்து நன்கு அரைத்து விழுதை பாதிக்கப்பட்ட பாகங்களில் பூசிவர வேண்டும்.

 • வேப்ப இலைகளுடன் மஞ்சள் அரைத்து பூசி வர வேண்டும்.

 • சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் வேப்ப இலைக் கஷாயம் தயாரித்து குடித்துவர வேண்டும். கொப்பளங்கள் காய்ந்து வரும் பொழுது, வெந்நீரில் வேப்ப இலைகளை போட்டு ஆறிய பின் குளித்துவர குணமாகும்.

 • தாழம்பூ இலை சாறு எடுத்து பூசி வர குணமாகும்.

 • அம்மை நோய் பாதிக்கப்படவர்களை பட்டாணியை வேக வைத்து ஆறியபின் வெந்நீரில் கலந்து குளிக்க வைக்கவும்.

 • காட்டு எள் கஷாயம் தயாரித்து நல்ல சுடுநீரில் கலந்து அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகளை நன்கு அலசி வெயிலில் உலர்த்தியபின் அணிவிக்க முத்துகள் விரைவில் மறையும்.

 • ஆலிவ் எண்ணெயை கொப்பளங்களில் பூசிவர குணமாகி தடயமும் விரைவில் மறைந்து போகும்.

 • அதிவிடயம் சாப்பிட்டுவர அம்மைநோய் அண்டாது.

 • அத்திமரப்பட்டை கஷாயம் தயாரித்து தினமும் மூன்று வேளை பருகிவர அம்மையின் கடுமை தணியும்.

 • பெரியம்மை அல்லது சின்னம்மை பாதிக்கப்பட்டவர்களை வெங்காயம் நறுக்கி துண்டுகளை அவரைச் சுற்றி பரப்பி வைக்க அம்மை பரவாமல் விரைவில் குணமாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்