ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சரிந்து தரையில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

Report Print Kavitha in மருத்துவம்
264Shares

இன்று பெரும்பாலும் நாம் அனைவருமே எப்படி மற்றவர்களுக்கு முதல் உதவி செய்வது என்பதை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஏனெனில் மாரடைப்பில் நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர் நம் அருகே இருந்து திடீரென்று மயக்கமடைந்து சரிந்து தரையில் விழுந்தால், அவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படாவிட்டால் மரணம் நிகழக் கூடும்.

இதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் சூழ்நிலையில் நம்மால் அவர்களுக்கு சிறிய முதல் உதவியாவது செய்வது அவசியமாகும்.

அந்தவகையில் மாரடைப்பால் மயங்கி விழுந்து கிடக்கும் நபருக்கு எப்படி முதல் உதவி செய்வது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

 • ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சரிந்து தரையில் விழுந்தால், அந்த நபரை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இரண்டு தோள்களை பலமாக தட்டி “நீங்கள் சரியா வா” என்று சத்தமாக கேட்க வேண்டும்.
 • அந்த நபர் எந்தவித செய்கையும் இல்லாமல் இருந்தால் அருகில் இருப்பவர்களை உடனே உதவிக்கு கூவி அழைக்க வேண்டும். உதவிக்கு வரும் நபரை உடனே கைப்பேசியில் அழைத்து ஆம்புலன்சை வரச்சொல்ல வேண்டும்.
 • பயிற்சி எடுத்திருந்தால் கழுத்தில் நாடி துடிப்பு உள்ளதா என்பதையும், மார்பு சுவாசத்தால் விரிவடைகிறதா? என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு 5 முதல் 10 வினாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது.
 • அந்த நபர் பேச்சு மூச்சு இன்றி தொடர்ந்து இருந்தால் அவரின் அருகில் மண்டியிட்டு இதய இயக்க மீட்பை தொடங்க வேண்டும்.
 • இதற்கு அவரது நெஞ்சு குழியில் நமது வலது கை இரண்டு விரல்களை செங்குத்தாக வைத்து இடது கையை அதற்கு மேல் விரல்களை அகட்டி வைக்க வேண்டும்.
 • கையின் அடிபாகம் மயக்கமடைந்தவரின் நெஞ்சு தட்டை எலும்பில் இருப்பதை உணர முடியும்.
 • நமது வலது கையை எடுத்து இடது கையின் மேல் வைத்து விரல்களை கீழ் உள்ள விரல்களின் உள்ளே நுழைத்து இறுக்கிப் பிடிக்க வேண்டும்.
 • முழங்கையை மடிக்காமல், நமது தோள்பட்டையிலிருந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அவரது நெஞ்சு 2 அங்குலம் வரை சுருங்குமாறு அழுத்த வேண்டும். இவ்வாறு 30 தடவை செய்ய வேண்டும்.
 • நெஞ்சு அழுத்ததிற்கு பிறகு இரண்டு “மீட்பு மூச்சு காற்று” வழங்க வேண்டும். இதற்கு அந்த நபரின் தாடையை உயர்த்தி, முன் தலையை பின்புறம் நகர்த்தி நமது வாயை அவரது வாயில் பொருத்தி நமது உள் இழுத்த மூச்சை இரண்டு முறை செலுத்த வேண்டும்.
 • நெஞ்சு அழுத்தம் தொடர்ந்து கொடுப்பதால் ஒவ்வொரு அழுத்தத்தின் போதும் இதயம் அழுத்தப்பட்டு ரத்தம்மூளை மற்றும் மற்ற உறுப்புகளுக்கு செலுத்தப்படும்.
 • ஒரு அழுத்தத்திற்கும் அடுத்த அழுத்தத்திற்கும் உள்ள இடைவெளியில் இதயம் விரிவடைந்து கை, கால், மார்பு, வயிறு ஆகிய பாகங்களில் இருந்து ரத்தம் இதயத்திற்கு வந்து சேரும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்