சளி, இருமலுக்கு ஒரு இயற்கை மருந்தாகும் கற்பூரவல்லி

Report Print Abisha in மருத்துவம்

மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள கற்பூரவல்லி பலநோய்களுக்கு தீர்வாக உள்ளது.

குறிப்பாக குழந்தைப் பருவத்தில் பெரும்பாலும் ஏற்படுகின்ற சுவாசக் கோளாறுகள், வயிற்று உப்பிஇருத்தல், மந்தம், வாந்தி எடுத்தல்,பசியின்மை, சளி, செரிமான குறைபாடுபோன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்குஉண்டு.

வீட்டுமருத்துவத்தில் சிறந்து விளங்கும் இந்த கற்பூர வல்லியினை மழைக்காலம், பனி மற்றும் குளிர்காலங்களில்அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிற நெஞ்சு சளி, சாதாரணகாய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

என்ன செய்ய வேண்டும்

கற்பூரவல்லியின்2 அல்லது 3 இலைகளை 150 மில்லி லிட்டர் அளவுதண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதனுடன் தேன் கலந்துஅருந்தலாம்.

பச்சிளம்குழந்தைகளுக்கு கற்பூரவல்லியின் ஓர் இலையை குக்கரில்இருந்து வெளிப்படும் ஆவியில் பல தடவைகாட்டி, அதில் இருந்து வடியும்சாறை தாய்ப்பாலுடன் கலந்து ஒரு சங்குகுடிக்க தரலாம்.

என்ன அளவு பருகவேண்டும்

5 வயதுக்குஉட்பட்ட குழந்தைகள் என்றால், 30 மில்லி கிராம் அதாவது கால் டம்ளர் வழங்க வேண்டும்.

ஐந்தில் இருந்து 12 வயதுவரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு கற்பூரவல்லி சாறை அரை டம்ளர் தருவது நல்லது.

குறிப்பு: இவ்வாறு தினமும்உணவு வேளைக்குப் பின்னர் காலை, மாலைஎன இரண்டு வேளை கொடுத்துவந்தால், வீஸிங் உட்பட சுவாசப்பாதை கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்