சிறுநீரக கற்களையும் கரைக்கும் அற்புத மருந்து... இப்படி சாப்பிடுங்க

Report Print Kavitha in மருத்துவம்

இன்று பெரும்பாலோனர் அவதிப்படும் நோய்களில் ஒன்று தான் சிறுநீரக பிரச்சினை.

சிறுநீரககற்கள் சிறுநீரகங்களுக்குள் உருவாகும் அல்லது சிறுநீர் செல்லும் பாதையில் உருவாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக கடுமையான வலி உண்டாகும். சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் இருக்கும்.

சிறுநீரக கற்களுக்கு உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் சிறுநீரகம் இயங்க முடியாமல் போய்விடும்.

இந்த பிரச்சினையிலிருந்து விடுபட சித்தர்கள் கையாண்டு வந்த வீட்டு வைத்தியத்தை பார்ப்போம்.

தேவையானவை

  • நொய்யரிசி - 100 கிராம்
  • சிறுநெருஞ்சில் - 5 கிராம்
  • மிளகு - 5 கிராம்
  • பூண்டு - ஒரு பல்
  • சீரகம் - கால் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

செய்முறை

முதலில் அரிசியை கழுவி 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

பின்பு சிறு நெருஞ்சில், மிளகு, பூண்டு, சீரகம் போன்றவற்றை நன்றாக மசித்து அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து சுத்தமான காட்டன் துணியில் முடிந்து நோய் அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் போதவில்லை என்றால் இன்னும் இரண்டு தம்ளர் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சாதத்தை குழைய வைத்து பின்னர் நெருஞ்சில் முடிச்சு போட்ட துணியை எடுத்து விட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடவும் .

இந்த கஞ்சியை தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் செயலிழந்த சிறுநீரகம் சீராக இயங்க உதவும். மேலும் சிறுநீரக கற்களையும் கரைக்கும். இது சித்தர்களின் அற்புதமான முறையாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers