தினமும் காலையில் இதை மட்டும் ஒரு டம்ளர் குடிங்க! எந்த நோயும் வராதாம்!

Report Print Jayapradha in மருத்துவம்

உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்த இயற்கையில் ஏராளமான பொருட்கள் உள்ளது.

அந்த வகையில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே நம் உடலில் எந்த நோயும் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.

ஓமம்

ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள், மாதவிடாய் வலியை ஆகியவற்றை குணமாக்கலாம்.

சீரகம்

ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.

பார்லி

ஒரு டீஸ்பூள் பார்லியை 1 1/2 கப் தண்ணீரில் சேர்த்து நன்கு காய்ச்சி, அதை இரவு முழுவதும் வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அதை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறும்.

கொத்தமல்லி விதை

ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊறவித்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தலாம்.

வெந்தயம்

வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கலாம்.

அருகம்புல்

ஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்து அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், இதனால் உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers