பைல்ஸ் பிரச்சனை வருதற்க்கு முக்கிய காரணமாக இருப்பவை இதுதான்

Report Print Jayapradha in மருத்துவம்

ஆசன வாயில் உள்ள நரம்புகளில் அழற்சி மற்றும் வீக்கம் ஏற்படுவதால், கடுமையான வலியுடன் அசௌகரியத்தை ஏற்படுத்தும் பிரச்சனை தான் பைல்ஸ் நோய்.

இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ஆசன வாயில் ரத்தக்கசிவு, மலம் கழிக்கும் போது வலி, அடிவயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் ஆசன வாயில் அரிப்பு இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பைல்ஸ் நோய் ஏற்பட என்ன காரணம்?
  • தினமும் மிகவும் கனமான பொருட்களைத் தூக்கும் போது, உடலின் கீழ் பகுதியில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுவதால், ஆசன வாயில் உள்ள நரம்புகள் முறிந்து பைல்ஸ் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
  • தினமும் அளவுக்கு அதிகமாக கால்களுக்கு உடற்பயிற்சியை செய்தால், அடிவயிற்றில் அதிகமான அழுத்தம் ஏற்பட்டு பைல்ஸ் பிரச்சனை உருவாகும் நிலைகள் ஏற்படுகிறது.
  • மலம் கழிக்க முடியாமல், கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்து மலம் கழிக்க முயற்சிப்பதால், ஆசன வாயில் உள்ள நரம்புகள் காயமடைந்து, பைல்ஸ் நோயை உண்டாக்குகிறது.
  • அன்றாட உணவில் அதிகமான எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால், மலம் இறுக்கமடைந்து, பைல்ஸ் பிரச்சனைகள் உருவாகிறது.
  • மலச்சிக்கல் பிரச்சனை மூலம் மலம் வெளியேற்றப்படாமல் குடலிலேயே பல நாட்களாக தேங்கி இருந்து, ஒரு கட்டத்தில் அதை வெளியேற்றும் போது, ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்குகிறது.
  • வயிற்றுப்போக்கு பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், தொடர்ச்சியாக மலம் கழிக்கும் போது, ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, பைல்ஸ் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
  • கர்ப்ப காலத்திலும் பைல்ஸ் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் வயிற்றில் உள்ள குழந்தை மலக்குடலில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது, ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிப்படைந்து பைல்ஸ் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers