மலச்சிக்கலை போக்க தினமும் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுங்கள்!

Report Print Jayapradha in மருத்துவம்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலுக்கும் ஆரோக்கியம் தருவது கீரைவகைகள் தான்.

அனைத்தனை வகை கீரைகளிலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. அதில் ஒன்றான பசலைக்கீரை மூளைவளர்ச்சிக்கு உதவுகிறது.

பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. மேலும் இதில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.

எப்படி சாப்பிடலாம்?
  • இந்த கீரையை பொடியாக நறுக்கி, சாலட்டுகளில் தூவி சாப்பிடலாம். இலைகளை பொரியல், கடையல், துவையல் என செய்து சாப்பிடலாம்.
  • முருங்கைக் கீரையைப் போன்று சூப் செய்து சாப்பிடலாம். சூப் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவை எல்லாவற்றையும் விட இந்த இலைகளைச் சாறெடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் குடித்துவரலாம்.

மருத்துவ பயன்கள்
  • இதில் உள்ள நார்ச்சத்து ஜீரண மண்டலத்தினுடைய செயல்பாடுகளை முறைப்படுத்தி செரிமானக் கோளாறுகளைத் தவிர்த்து மிக எளிதில் மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகின்றது. எனவே இதனை தினம் ஒரு கைப்பிடி அளவுக்கு உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
  • நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது.
  • பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண் டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.
  • பாலக்கீரை இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம்,பூண்டு இரண்டு பல் ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
  • பசலைக்கீரையில் உள்ள லுடின் கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers