கண்களை வைத்தே உங்களின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்?

Report Print Jayapradha in மருத்துவம்

நமது விருப்பங்களை கண்களால் எளிதில் புரிய வைக்க முடியும். அத்தகைய கண்களின் ஏதேனும் பிரச்சனை வந்தால் வெளிபடுத்தும் முக்கிய பிரச்சனைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

கண் இமை உதிர்ந்தால்

வயது முதிர்வு, மன அழுத்தம், ஊட்டசத்து குறைபாடு போன்ற பல காரணம் கண் இமை உதிர்தலுக்கு இருக்கலாம். ஆனால் இன்னொரு முக்கிய காரணம் தைராய்டு சுரப்பிக் குறைபாடாகும்.

மங்கலான பார்வை

கணினி, செல்போன் போன்ற சாதனங்களை தொடர்ந்து பார்த்தால் கண் எரிச்சல், மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் வரும்.

இள மஞ்சள் நிற கண்கள்

கண்களின் நிறம் மஞ்சளாக இருந்தால் அது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும். அதுமட்டுமின்றி பித்தப்பை நாளங்களில் எதாவது பிரச்சனை இருந்தால் கூட கண்கள் நிறம் மஞ்சளாக இருக்கும்.

கண்களில் நிரந்தர கட்டி

சிலருக்கு கண்களுக்கு கீழே கட்டி இருக்கும். அது சில நாட்களில் சரியாகிவிடும். நிரந்தரமாக ஒருவருக்கு கட்டி இருந்தால் Sebaceous Gland Carcinoma என்னும் தோல் நோய் சம்மந்தமான அறிகுறி ஆகும்.

மேகமூட்டமாக தெரிதல்

இந்த அறிகுறி நீரிழிவு நோயளிகளுக்கு தான் முக்கியமாக தோன்றும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் மருத்துவ பரிசோதனை குறிப்பிட்ட கால அளவில் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் இது கண்களின் ரெட்டினாவை பாதிக்கும்.

பார்வை குறைதல்

பார்வை குறைபாடோ அல்லது ஒன்றுமே தெரியாமல் போனாலோ தாமதிக்காமல் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். இது பக்கவாதம் வருவதற்கான முக்கிய அறிகுறியாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்